ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் பூஜை செய்யலாம்: வாரணாசி நீதிமன்றம்
ANI

ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் பூஜை செய்யலாம்: வாரணாசி நீதிமன்றம்

"மாவட்ட நிர்வாகம் அடுத்த 7 நாள்களுக்குள் இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்."
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்துக்கள் பூஜை செய்து வழிபடலாம் என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் அடுத்த 7 நாள்களுக்குள் இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், "அடுத்த 7 நாள்களில் பூஜைகள் தொடங்கும். பூஜை செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது" என்றார்.

ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் 4 பகுதிகள் உள்ளன. இதில் ஒரு பகுதி காலம் காலமாக பூஜை நடத்தி வருபவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூஜை செய்பவர்கள் என்கிற அடிப்படையில், அங்கு நுழைவதற்கும், பூஜை செய்து வழிபடுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in