மக்களவைத் தேர்தல்: சமாஜவாதி வேட்பாளர்கள் அறிவிப்பு

அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவதற்கான 16 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை சமாஜவாதி கட்சி வெளியிட்டுள்ளது.

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். டிசம்பர் 2022-ல் மெயின்புரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியும், காங்கிரஸும் இண்டியா கூட்டணியில் உள்ளன. 80 மக்களவைத் தொகுதிகளில் 11 இடங்களை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த 27-ம் தேதி அறிவித்தது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளத்துக்கு 7 இடங்கள் ஒதுக்கப்படுவதாக சமாஜவாதி கடந்த 19-ம் தேதி அறிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in