பிகார் முதல்வராக 9-வது முறையாகப் பதவியேற்றார் நிதிஷ் குமார்

சாம்ராத் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றார்கள்.
பிகார் முதல்வராக 9-வது முறையாகப் பதவியேற்றார் நிதிஷ் குமார்
ANI
1 min read

ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் 9-வது முறையாக பிகார் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

மெகா கூட்டணியை முறித்துக்கொண்டு இன்று காலை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ் குமார், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பாட்னா வந்தார்.

பதவியேற்பு விழாவில், நிதிஷ் குமார் 9-வது முறையாக பிகார் முதல்வராகப் பதவியேற்றார். சாம்ராத் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in