ஆண்டர்சன்
ஆண்டர்சன்ANI

ஜாகீர் கானிடம் ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக் கொண்டேன்: ஆண்டர்சன்

700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த ஆண்டர்சனுக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

ஜாகீர் கானிடம் ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக் கொண்டதாக ஆண்டர்சன் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் பந்துவீச்சு தனக்கு உத்வேகம் அளித்ததாகவும், ரிவர்ஸ் ஸ்விங் பந்தை எவ்வாறு வீச வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறினார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் வரும் 7 அன்று தொடங்குகிறது. இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

இத்தொடரில் ஆண்டர்சன் இதுவரை விளையாடிய மூன்று டெஸ்டுகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜியோ சினிமாவுக்கு அளித்த ஒரு பேட்டியில் பேசியதாவது:

“ஜாகீர் கானின் பந்துவீச்சு எனக்கு உத்வேகம் அளித்தது, ரிவர்ஸ் ஸ்விங் பந்தை எவ்வாறு வீச வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்" என்றார்.

மேலும் இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து ஆண்டர்சன், “பும்ரா உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பது சாதாரண விஷயமல்ல. பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரை விட சிறந்த பந்துவீச்சாளர்கள் குறைந்த அளவில் உள்ளனர். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். இஷாந்த் சர்மாவும் அவர்களுடன் இணைந்தால் பந்துவீச்சு இன்னும் வலிமையடையும்” என்றார்.

இதைத் தொடர்ந்து ஆண்டர்சன் அவரின் வயது குறித்து பேசியதாவது:

“எனக்கு 41 வருடம் 200 நாட்கள் ஆகிறது என தெரியவில்லை, நான் இன்னும் இளமையாக உணர்கிறேன். பயிற்சியில் இளம் வீரர்களுக்கு ஈடுகொடுக்க என்னால் முடியும். நான் விரும்பும் வேகத்தை என்னால் இன்னும் வீச முடியும், நான் விரும்பும் திறன்களை இன்னும் வழங்க முடியும். வயது என்பது ஒரு எண் மட்டுமே” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in