கோவை ரஞ்சி கோப்பை: 183 ரன்களுக்கு செளராஷ்டிர அணியைச் சுருட்டிய தமிழகம்

கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும் அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
கோவை ரஞ்சி கோப்பை: 183 ரன்களுக்கு செளராஷ்டிர அணியைச் சுருட்டிய தமிழகம்
படம் - twitter.com/TNCACricket

கோவையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் முதல் நாளில் செளராஷ்டிர அணி, 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டாஸ் வென்ற செளராஷ்டிர அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழகச் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து பேட்டர்களை ஓய்வறைக்கு அனுப்பினார்கள். 61 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த செளராஷ்டிரம், 77.1 ஓவர்களில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. புஜாரா 2 ரன்களுக்கு அஜித் ராம் பந்தில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும் அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. விமல் குமார் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். என். ஜெகதீசன் 12, சாய் கிஷோர் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in