இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்: இந்திய அணியில் ஆகாஷ் தீப் அறிமுகம்

கேஎல் ராகுல் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சேர்க்கப்படவில்லை.
ரோஹித் சர்மா, பென் ஸ்டோக்ஸ் (கோப்புப்படம்)
ரோஹித் சர்மா, பென் ஸ்டோக்ஸ் (கோப்புப்படம்)ANI

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெறுகிறது. முதல் 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்தின் விளையாடும் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது. ரெஹான் அஹமது, மார்க் வுட் ஆகியோருக்குப் பதில் சோயிப் பஷீர், ஆலி ராபின்சன் விளையாடுகிறார்கள்.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதில் ஆகாஷ் தீப் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார். இந்திய அணிக்காக விளையாடும் 313-வது வீரர் எனும் பெருமையைப் பெறுகிறார். கேஎல் ராகுல் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சேர்க்கப்படவில்லை. ரஜத் படிதார் அணியில் நீடிக்கிறார்.

டாஸ் வென்றிருந்தால், முதல் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்பேன் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in