ராஞ்சி டெஸ்ட்: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
ANI

ராஞ்சி டெஸ்ட்: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணியில் மாற்றம்: ராபின்சன், பஷீர் இணைவு
Published on

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியில் நாளை தொடங்கும் டெஸ்டில், இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மார்க் வுட், ரெஹான் அஹமது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குப் பதிலாக ஆலி ராபின்சன், சோயிப் பஷீர் விளையாடுகிறார்கள். கடந்த ஜூலையில், ஆஷஸ் 3-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார் ராபின்சன்.

டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி

ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷிர்

logo
Kizhakku News
kizhakkunews.in