ராஜ்கோட் டெஸ்ட்: 4-வது நாளில் இந்திய அணியுடன் இணையும் அஸ்வின்

இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்தார்.
ராஜ்கோட் டெஸ்ட்: 4-வது நாளில் இந்திய அணியுடன் இணையும் அஸ்வின்
ANI

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டிலிருந்து பாதியில் விலகிய அஸ்வின், 4-வது நாளில் மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தது. இதில் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது அஸ்வின் 7 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இவரது இந்த சாதனைக்கு வாழ்த்துகள் குவிந்தன.

அன்றைய நாள் இரவு தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜ்கோட் டெஸ்டிலிருந்து பாதியில் விலகி சென்னை திரும்பினார். இதனால், 3-வது நாள் ஆட்டத்தில் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி பந்துவீசியது.

இந்த நிலையில், அஸ்வின் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 4-வது நாளில், உணவு இடைவேளைக்குப் பிறகு அவர் இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வினின் வருகை இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சு மட்டுமின்றி, பேட்டிங்குக்கும் பலம் சேர்க்கவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in