வில்லியம்சன் மீண்டும் சதம்: 2-0 என டெஸ்ட் தொடரில் தோற்ற தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது தென்னாப்பிரிக்க அணி.
வில்லியம்சன்
வில்லியம்சன்ANI

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது தென்னாப்பிரிக்க அணி.

ஹேமில்டனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 242 ரன்களும் நியூசிலாந்து அணி 211 ரன்களும் எடுத்தன. முக்கிய வீரர்கள் இல்லாத தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று ஆச்சர்யப்படுத்தியது. ஆனால் 2-வது இன்னிங்ஸில் 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று மிகவும் சிறப்பாக விளையாடி, 94.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதோடு, டெஸ்ட் தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது.

கேன் வில்லியம்சன் 133 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தத் தொடரில், 3 சதங்களுடன் 403 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதையும் பெற்றார். 2-வது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் எடுத்த வில்லியம் ஓ ரோர்க், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in