டெஸ்ட் தரவரிசை: முதலிடம் பிடித்து பும்ரா சாதனை

தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
பும்ரா
பும்ராANI

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கபில் தேவ், 1979-80-ல் 2-வது இடத்தைப் பிடித்ததே சாதனையாக இருந்தது. பும்ரா, இதற்கு முன்பு அதிகபட்சமாக 3-வது இடத்தையே பிடித்திருந்தார். இம்முறை தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதனால் அஸ்வின், 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான விசாகப்பட்டினம் டெஸ்டில் 9 விக்கெட்டுகளை பும்ரா எடுத்ததால் இந்த இலக்கை எட்ட முடிந்தது. மேலும் 150 டெஸ்ட் விக்கெட்டுக்ளை வேகமாக எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையையும் இந்த டெஸ்டில் அடைந்தார்.

டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜெயிஸ்வால், 37 இடங்கள் முன்னேறி, 29-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அவர் இரட்டைச் சதம் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு சதங்கள் அடித்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், பேட்டர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in