ஹைதராபாத் டெஸ்ட்: 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் இங்கிலாந்து

விளையாடும் லெவனில் மார்க் வுட் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்REUTERS

இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாதில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கவிருக்கும் முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ஹைதராபாதில் நடைபெறுகிறது. இந்த டெஸ்டுக்கான இங்கிலாந்தின் விளையாடும் லெவனில் மார்க் வுட் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது. இதுதவிர ஜோ ரூட் பகுதிநேரப் பந்துவீச்சாளராகவும் செயல்படவுள்ளார்.

இங்கிலாந்து கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவலில் விளையாடிய டெஸ்டில் இடம்பெறாத ஆலி போப், ரெஹான் அஹமது, பென் ஃபோக்ஸ், ஜேக் லீச் ஆகியோர் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியுள்ளார்கள்.

முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

ஸாக் கிராலே

பென் டக்கெட்

ஆலி போப்

ஜோ ரூட்

ஜானி பேர்ஸ்டோ

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)

பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்)

ரெஹான் அஹமது

டாம் ஹார்ட்லே

மார்க் வுட்

ஜேக் லீச்

டெஸ்ட் அட்டவணை:

முதல் டெஸ்ட் - ஜனவரி 25 - 29, ஹைதராபாத்

இரண்டாவது டெஸ்ட் - பிப்ரவரி 2 - 6, விசாகப்பட்டினம்

மூன்றாவது டெஸ்ட் - பிப்ரவரி 15 - 19, ராஜ்கோட்

நான்காவது டெஸ்ட் - பிப்ரவரி 23 - 28, ராஞ்சி

ஐந்தாவது டெஸ்ட் - மார்ச் 7 - 11, தரம்சலா

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in