ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல ஆஸி. வீரர்கள்

ஆரோன் ஃபிஞ்ச் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஷான் மார்ஷ் இன்னும் ஓர் ஆட்டத்துடன் விடைபெறவுள்ளார்.
ஷான் மார்ஷ்
ஷான் மார்ஷ்ANI

பிரபல ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஷான் மார்ஷ் இன்னும் ஓர் ஆட்டத்துடன் விடைபெறவுள்ளார்.

2021-ல் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஃபிஞ்ச். டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்த ஆரோன் ஃபிஞ்ச், அதிலிருந்தும் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். பிக் பாஷ் போட்டியில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காகத் தனது கடைசி ஆட்டத்தை விளையாடினார் ஃபிஞ்ச். கடைசி இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர்களில் 11,458 ரன்களுடன் 7-வது இடத்தில் உள்ளார் ஃபிஞ்ச். ஆஸி. வீரர்களில் வார்னருக்கு அடுத்த இடத்தில். எட்டு டி20 சதங்களும் எடுத்துள்ளார்.

இதேபோல மற்றொரு பிரபல வீரரான ஷான் மார்ஷும் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். வரும் புதனன்று மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக சிட்னி தண்டர் அணிக்கு எதிராக சிட்னியில் விளையாடவுள்ளார். அதுவே அவருடைய கடைசி ஆட்டமாக இருக்கப் போகிறது.

40 வயது ஷான் மார்ஷ் - ஆஸி. அணிக்காக 38 டெஸ்டுகள், 73 ஒருநாள், 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in