புதுமுக விக்கெட் கீப்பர்: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

முதல் இரு டெஸ்டுகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமுக விக்கெட் கீப்பர்: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ANI

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஹைதராபாதில் ஜனவரி 25 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் முதல் இரு டெஸ்டுகளுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் துருவ் ஜுரெல் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது துருவ் ஜுரெல், ஒரு விக்கெட் கீப்பர் - பேட்டர். இந்திய ஏ அணிக்காக தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் விளையாடினார். காயம் காரணமாக ஷமி இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி (முதல் இரு டெஸ்டுகள்)

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெயிஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், கே.எஸ். பரத், துருவ் ஜுரெல், ஆர். அஸ்வின், ஆர். ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in