டபிள்யூபிஎல் 2024: பெங்களூரு, தில்லியில் நடத்த பிசிசிஐ முடிவு

இப்போட்டி பிப்ரவரி 22 முதல் மார்ச் 17 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்பையை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்
கோப்பையை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்ANI

டபிள்யூபிஎல் 2024 போட்டியை பெங்களூரு, தில்லி ஆகிய இடங்களில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இப்போட்டி பிப்ரவரி 22 முதல் மார்ச் 17 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபிள்யூபிஎல்-ன் முதல் பருவம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான டபிள்யூபிஎல் போட்டியை நடத்த பெங்களூரு மற்றும் தில்லி ஆகிய இடங்கள் தேர்வாகியுள்ளது. 5 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் 22 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் 11 ஆட்டங்கள் பெங்களூருவிலும், இறுதி ஆட்டம் உட்பட அடுத்த 11 ஆட்டங்கள் தில்லியிலும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டபிள்யூபிஎல் போட்டி மும்பை மற்றும் நவி மும்பையில் நடைபெற்றது. சமீபத்தில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா இப்போட்டியை ஒரே மாநிலத்தில் நடத்தபோவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது பெங்களூரு மற்றும் தில்லியில் நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in