பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர்: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி@narendramodi

ஜம்மு-காஷ்மீரில் ரூ. 5000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 கடந்த 2019-ல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

“பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் புதிய உயரங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்.

இந்த புதிய காஷ்மீரைக் காண பல ஆண்டுகளாக காத்திருந்தோம். ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலாவிற்காக யார் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத்துறை அனைத்து சாதனைகளையும் செய்து வருகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதன் மூலம் காஷ்மீரின் பொருளாதாரம் முன்னேறும் மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

என்னுடைய அடுத்த இலக்கு “வெட் இன் இந்தியா”. இதன் மூலம் மக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு வந்து தங்கள் திருமணத்தை நடத்த வேண்டும்.

இங்குள்ள அனைத்து ஏரிகளிலும் தாமரையைப் பார்க்க முடிகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் சின்னத்திலும் தாமரை உள்ளது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளர்ச்சி அடையும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in