நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி

மார்ச் 11 முதல் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்கிறார் அஜித்.
நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி@SureshChandraa
1 min read

வழக்கமான பரிசோதனைக்காக நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். அனிருத் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும், இன்றே வீட்டிற்குத் திரும்பிவிடுவார் என்றும் அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும் அஜித் மார்ச் 15 முதல் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் காரணத்துக்காக இந்த பரிசோதனையை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in