கேப்டன் - பயிற்சியாளரை அடிக்கடி மாற்றும் சன்ரைசர்ஸ்: ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

சன்ரைசர்ஸ் அணி நான்கு வருடங்களாக வெவ்வேறு கேப்டன், பயிற்சியாளர்களுடன் விளையாடுகிறது.
சன்ரைசர்ஸ் அணி
சன்ரைசர்ஸ் அணி ANI

நான்கு வருடங்களாக வெவ்வேறு கேப்டன், பயிற்சியாளர்களுடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடுவதாக ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்குகிறது.

சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டார். மேலும் பேட் கம்மின்ஸை கேப்டனாக அறிவித்த சன்ரைசர்ஸ் அணி நான்கு வருடங்களாக வெவ்வேறு கேப்டன், பயிற்சியாளர்களுடன் விளையாடுகிறது.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியில் அடிக்கடி நிகழும் மாற்றங்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

“சன்ரைசர்ஸ் அணியின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நான்கு வருடங்களாக வெவ்வேறு கேப்டன், பயிற்சியாளர்களுடன் விளையாடுகிறது. 2021-ல் வார்னர் - டிரவோர் பேலிஸ், 2022-ல் வில்லியம்சன் - டாம் மூடி, 2023-ல் மார்க்ரம் - லாரா, தற்போது 2024-ல் கம்மின்ஸ் - வெட்டோரி. மாற்றம் மட்டுமே மாறாதது என்று சொல்லுவார்கள், ஆனால் இங்கே எல்லாவற்றையும் மாற்றுவதில் சன்ரைசர்ஸ் அணி நம்பிக்கை கொள்கிறது. எனவே, தொடர்ந்து 4-வது ஆண்டாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கூட்டணியுடன் முன்னேற முயற்சி செய்கின்றனர். அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

சன்ரைசர்ஸ் அணி 2016-ல் டேவிட் வார்னர் தலைமையில் கோப்பையை வென்றது. இதன் பிறகு 2018-ல் கேன் வில்லியம்சன் தலைமையில் 2-வது இடத்தைப் பிடித்தது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த ஆண்டு தனது முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணியுடன் விளையாடுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in