தரம்சாலா டெஸ்ட்: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

ராபின்சனுக்கு பதிலாக மார்க் வுட் இங்கிலாந்து அணியில் இணைந்தார்.
மார்க் வுட்
மார்க் வுட்ANI

5-வது டெஸ்டுகான இங்கிலாந்து அணியில் ராபின்சனுக்கு பதிலாக மார்க் வுட் இணைந்தார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றது இந்திய அணி. இந்நிலையில் நாளை 5-வது டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றமாக ராபின்சனுக்கு பதிலாக மார்க் வுட் அணியில் இணைந்தார். இத்தொடரில் மார்க் வுட் இரண்டு டெஸ்டுகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடந்த மாதம் தரம்சாலாவில் நடைபெற்ற ஹிமாச்சலப் பிரதேசம் - தில்லி இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 36 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர். எனவே நாளை நடைபெறும் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் ராபின்சனுக்கு பதிலாக மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை தேர்வு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.

5-வது மற்றும் கடைசி டெஸ்டுகான இங்கிலாந்து அணி:

ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷிர்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in