ஐபிஎல் 2024: காயம் காரணமாக கான்வே விலகல்?

மே மாதம் வரை ஐபிஎல் போட்டியில் கான்வே பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.
கான்வே
கான்வேANI
1 min read

இடக்கை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் கான்வே. இதனால் ஐபிஎல் 2024 போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் கான்வே பந்தைப் பிடிக்க முயற்சி செய்தபோது, அவரது இடக்கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதையடுத்து, காயத்திலிருந்து குணமடைய 8 வாரங்கள் வரை ஆகலாம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மே மாதம் வரை ஐபிஎல் போட்டியில் கான்வே பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. ஐபிஎல் 2023-ல் கான்வே சிஎஸ்கே அணிக்காக 16 ஆட்டங்களில் விளையாடி 672 ரன்களைக் குவித்தார். குஜராத் அணிக்கு எதிரான இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில் அவர் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் மே மாதம் வரை விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in