பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு

கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் சென்னையில் அண்ணா நகர், கோபாலபுரம், பாரிமுனை, ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மர்ம நபர்களால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இந்நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த வாரம் கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் வந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை முடிவு செய்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சல் மூலம் இதுவரை மூன்று முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in