இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும்: வானதி சீனிவாசன்

பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்ANI

பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டது. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள், மக்களவைத் தலைவர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் குழுக் கூட்டத்தில் இவர் பங்கேற்றார்.

வானதி சீனிவாசன் பேசியதாவது:

“முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும். மேலும் கர்நாடகம், மஹாராஷ்டிரம், பிகார், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in