உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்திய அணி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி
ANI

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்திய அணி.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூஸிலாந்து அணிக்கு 369 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி 64.58 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 59.09 புள்ளிகளுடன் 3-வது இடத்த்தில் உள்ளது.

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றது இந்திய அணி. கடைசி டெஸ்ட் மார்ச் 7 அன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in