ஐபிஎல் 2024: பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டெயின் விலகல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமனம்.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டெயின் விலகல்
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டெயின் விலகல்@DaleSteyn62

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேல் ஸ்டெயின் விலகியுள்ளார். புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய வேகப்பந்து பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் செயல்படுவார். 2022 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக இருந்த டேல் ஸ்டெயின் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

ஃபிராங்க்ளின் டர்ஹாம் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார், மேலும் தற்போது பிஎஸ்எல் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

2011, 2012 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பயிற்சியாளராகக் களமிறங்குகிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டிற்கான ஏலத்தில் பேட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனாட்கட், ஆகாஷ் சிங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் கடைசி இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு தனது முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணியுடன் விளையாடுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in