எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்

எழுத்தாளர் இராசேந்திர சோழன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.
எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்
எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்@TVKYouthwing

எழுத்தாளர் இராசேந்திர சோழன் என்கிற அஷ்வகோஷ், உடல்நலமின்றி இருந்த நிலையில் இன்று காலமானார்.

இராசேந்திர சோழன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். 1945-ல் உளுந்தூர்பேட்டையில் பிறந்த இவர் 1968-ல் ஆசிரியராகி 20 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான இராசேந்திர சோழன் - ‘உதயம்’, ‘பிரச்சனை’, ‘மண்மொழி’ போன்ற இதழ்களை நடத்தினார். இலக்கியம், நாடகம், அரசியல் எனப் பல்வேறு தளங்களில் இயங்கினார். சிறுகதை, நாவல்கள் எனப் புனைவிலக்கியத்தில் தீவிரமாக இயங்கிய இராசேந்திர சோழன், பல்வேறு நாடகங்களையும் மார்க்சிய அரசியல் நூல்களையும் எழுதியுள்ளார். மார்க்சியம், திராவிடம், தமிழ்த்தேசியம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பயிற்சி பெற்று, தமிழ்நாடு முழுவதும் பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார்.

இந்நிலையில் பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இராசேந்திர சோழன், சிகிச்சை பலனின்றி தனது 79 வயதில் காலமானார். இவரின் மறைவிற்கு எழுத்தாளர்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in