பாண்டியாவுக்கு மட்டும் ஒரு நியாயமா? - பிசிசிஐயிடம் பதான் கேள்வி

பாண்டியா இந்திய அணிக்காக விளையாடாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டாமா? என முன்னாள் இந்திய வீரரான இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இர்ஃபான் பதான்
இர்ஃபான் பதான்ANI

பாண்டியா இந்திய அணிக்காக விளையாடாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டாமா? என முன்னாள் இந்திய வீரரான இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. 30 வீரர்கள் கொண்ட இப்பட்டியலில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டனர். இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய உள்ளூர் போட்டிகளில் விளையாட முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளுக்கு சமீபத்தில் ஆளாகினார்கள். அதன் விளைவாக இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாண்டியாவுக்கு மட்டும் ஒரு நியாயமா? என பிசிசிஐயிடம் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முன்னாள் இந்திய வீரரான இர்ஃபான் பதான் கூறியதாவது:

“இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் திறமையான வீரர்கள். இதிலிருந்து மீண்டு வலிமையுடன் அவர்கள் திரும்ப வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பமில்லாத ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்கள், இந்திய அணிக்காக விளையாடாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டாமா?. இந்த விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தாது என்றால், இந்திய அணிக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in