ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் ‘த்ரிஷ்யம்’

அடுத்த 5 ஆண்டுகளில் 10 நாடுகளின் மொழிகளில் ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம்-2’ படங்கள் ரீமேக் செய்யப்பட உள்ளது.
‘த்ரிஷ்யம்’
‘த்ரிஷ்யம்’@Mohanlal

‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் - 2’ படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

மேலும் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற புகழையும் பெற்றது ‘த்ரிஷ்யம்’. இதைத் தொடர்ந்து தற்போது ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் - 2’ ஆகிய படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

ஒரு இந்தியப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் ‘த்ரிஷ்யம்’ சாதனை படைத்துள்ளது.

ஏற்கெனவே, கொரியன் மற்றும் இந்தோனேஷிய மொழியில் ‘த்ரிஷ்யம்’ படம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 10 நாடுகளின் மொழிகளில் ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம்-2’ படங்களை ரீமேக் செய்ய பனோரமா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in