சென்னை: மாநகராட்சி பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறலாம்

புறநகர் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்களில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் உள்ள நிலையில் இனி சென்னை மாநகராட்சி பேருந்துகளிலும் மக்கள் யுபிஐ மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
மாநகராட்சி பேருந்துகளில் யுபிஐ வசதி
மாநகராட்சி பேருந்துகளில் யுபிஐ வசதி@arasubus
1 min read

இனி சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மக்கள் யுபிஐ மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இந்தியாவில் பெரும்பாலான இடங்களில், மக்கள் தங்களின் அன்றாட வாழ்கையில் நேரடியாக பணத்தை செலுத்துவதற்கு பதிலாக எளிதாக யுபிஐ மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். புறநகர் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்களில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் உள்ள நிலையில் இனி சென்னை மாநகராட்சி பேருந்துகளிலும் மக்கள் யுபிஐ மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 50 பிஎஸ்-6 பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இதைத் தொடர்ந்து டெபிட் கார்ட், யுபிஐ மூலம் டிக்கெட் பெறுவதற்கான மின்னனு டிக்கெட் இயந்திரத்தையும் நடத்துநர்களுக்கு வழங்கி உள்ளனர்.

சென்னை மாநகராட்சி பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in