ஜெயிஸ்வால்
ஜெயிஸ்வால்ANI

ஐசிசி தரவரிசை: 57 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்த ஜெயிஸ்வால்

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி, 12-வது இடத்திற்கு முன்னேறினார் ஜெயிஸ்வால்.
Published on

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி, 12-வது இடத்திற்கு முன்னேறினார் ஜெயிஸ்வால்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பு, டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்தார் இந்தியத் தொடக்க வீரர் ஜெயிஸ்வால். 4 டெஸ்டுகளில் 655 ரன்கள் எடுத்ததால் தற்போது 57 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இத்தொடரில் அறிமுகமான துருவ் ஜுரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்தைப் பிடித்தார். இரண்டு டெஸ்டுகளில் 175 ரன்கள் எடுத்தார் ஜுரெல்.

மேலும் இத்தொடரில் அசத்தி வரும் ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் வில்லியம்சன் முதலிடத்திலும், ஸ்டீவன் ஸ்மித் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாம் இடத்திலும், ஜடேஜா 6-வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து வீரரான ஜோ ரூட், இத்தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அக்‌ஷர் படேல் ஒரு இடம் இறங்கி 5-வது இடத்திலும் உள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in