பிசிசிஐ ஒப்பந்தம்: இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் நீக்கம்

புஜாரா, ஷிகர் தவன், உமேஷ் யாதவ், தீபக் ஹூடா, சஹால் ஆகியோரும் இந்த வருட ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.
பிசிசிஐ ஒப்பந்தம்
பிசிசிஐ ஒப்பந்தம்ANI

2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 30 வீரர்கள் கொண்ட இப்பட்டியலில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கடைசியாக டிசம்பர் மாதத்தில் இந்திய அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் தனக்கு ஓய்வு வேண்டும் எனக் கூறி அணியில் இருந்து விலகினார். இஷான் கிஷனிடம் ரஞ்சி கோப்பையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டும் அவர் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ஷ்ரேயஸ் ஐயர். இருவருமே, இந்திய உள்ளூர் போட்டிகளில் விளையாட முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளுக்கு சமீபத்தில் ஆளாகினார்கள். அதன் விளைவாக இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த வருட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற புஜாரா, ஷிகர் தவன், உமேஷ் யாதவ், தீபக் ஹூடா, சஹால் ஆகியோரும் இந்த வருட ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

பிசிசிஐ ஒப்பந்தத்தில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் ‘ஏ+’ பிரிவில் உள்ளார்கள். கடந்த ஆண்டில் அறிமுகமான ரஜத் படிதார், முகேஷ் குமார், ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ‘சி’ பிரிவில் இடம்பெற்றனர்.

கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் ‘பி’ பிரிவில் இருந்த சிராஜ் ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இளம் வீரர் ஜெயிஸ்வால் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றூள்ள வீரர்களின் விவரம்:

ஏ+ பிரிவு - ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா

ஏ பிரிவு - அஸ்வின், ஷமி, ஹார்திக் பாண்டியா, சிராஜ், ராகுல், கில்

பி பிரிவு - சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், ஜெயிஸ்வால்

சி பிரிவு - ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெயிக்வாட், ஷார்துல் தாக்குர், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ். பரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், ரஜத் படிதார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in