வெற்றிகரமாக நிறைவடைந்த அறுவை சிகிச்சை: புகைப்படங்களை வெளியிட்ட ஷமி

ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷமி
ஷமி@mdshami.11
1 min read

ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ஷமி. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டார் ஷமி. இந்நிலையில் அவர் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதிலிருந்து மீண்டு வர நேரமாகும், விரைவில் குணமடைந்து திரும்புவதை எதிர்நோக்கி உள்ளேன்” என்றார்.

ஐபிஎல் போட்டியில் 110 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷமி, 127 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த இரு வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியா மும்பை அணிக்கு மாறிவிட்ட நிலையில் ஷமியும் குஜராத் அணியில் விளையாடவில்லை என்றால் அது குஜராத் அணிக்கு மேலும் பின்னடைவாக அமையும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in