ரஞ்சி கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற விதர்பா, மும்பை அணிகள்

மார்ச் 2 அன்று தொடங்கும் அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு அணி மும்பையையும், விதர்பா அணி மத்தியப் பிரதேச அணியையும் எதிர்கொள்கின்றன.
ரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பைANI

அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு அணி மும்பையையும், விதர்பா அணி மத்தியப் பிரதேச அணியையும் எதிர்கொள்கின்றன.

ரஞ்சி கோப்பை 2024 அரையிறுதிச் சுற்றை எட்டியது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றதைத் தொடர்ந்து இன்று மும்பை மற்றும் விதர்பா அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

விதர்பா - கர்நாடகம் இடையிலான ஆட்டத்தில் விதர்பா அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை - பரோடா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்ததால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற மும்பை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இதைத் தொடர்ந்து மார்ச் 2 அன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதில் தமிழ்நாடு அணி மும்பையையும், விதர்பா அணி மத்தியப் பிரதேச அணியையும் எதிர்கொள்கின்றன. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 2016 - 17 ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி மும்பையிடம் தோல்வியடைந்தது. இதன் பிறகு மீண்டும் தற்போது மும்பை அணியுடன் மோதுகிறது.

கடைசியாகத் தமிழக அணி 2014 - 15 ரஞ்சி கோப்பையில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. 36 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சி கோப்பையை வென்ற தமிழக அணி இந்தாண்டு கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in