நீல் வேக்னர்
நீல் வேக்னர்ANI

நியூசி. வேகப்பந்து வீச்சாளர் நீல் வேக்னர் ஓய்வு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னை தேர்வு செய்யவில்லை என்பதால் ஓய்வை அறிவித்தார் நீல் வேக்னர்.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வரும் 29 அன்று தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் தன்னை தேர்வு செய்யவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இவர் 64 டெஸ்டுகளில் பங்கேற்று 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திச் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட 2-வது நியூசிலாந்து பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் வேக்னர்.

தன்னுடைய ஓய்வு குறித்து வேக்னர் கூறியதாவது:

“ஓய்வுக்கான நேரம் நெருங்குவதை நான் அறிந்தேன். மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் இந்த முடிவை எடுக்க இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது என்றும் என் நினைவில் இருக்கும். இந்த பயணத்தில் எனக்கு உதவி செய்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in