வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் புதிய முயற்சி!

வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் புதிய முயற்சி!

மக்களைத் தேர்தலையொட்டி வாக்காளரிடம் விழிப்புணர்வை அதிகரிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு வங்கிகள், அஞ்சலகங்கள் உதவும்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தபால் துறையுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாட்டில் தேர்தல் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அயராத முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய வங்கிகள் சங்கமும் தபால் வங்கித் துறையும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். குடிமக்கள் தங்கள் தேர்தல் உரிமைகள், வாக்களிப்பதற்கான செயல்முறைகளை அறிந்துகொள்ளவும் தேர்தல் ஆணையத்துக்கு உதவியாக இருக்கும்.

பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தால் தேர்தல்களை நியாயமான மற்றும் அமைதியான முறையில் வெற்றிகரமாக நிர்வகித்து நடத்திய போதிலும், வாக்காளர்களின் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தபோதிலும், சுமார் 30 கோடி வாக்காளர்கள் (91 கோடியில்) 2019 மக்களவைத் தேர்தலுக்கான பொதுத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு 67.4 சதவீதமாக இருந்தது. அதை மேம்படுத்த ஆணையம் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், இரு அமைப்புகளும் தேர்தல் நடைமுறைகளில் தங்கள் பங்களிப்பை அளிக்கவுள்ளன எனத் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கல்விப் பாடத்திட்டத்தில் தேர்தல் கல்வியறிவை முறையாக ஒருங்கிணைக்கக் கல்வி அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in