நோ பால் சர்ச்சை: வனிந்து ஹசரங்காவுக்கு தடை

நடுவரை விமர்சித்த காரணத்துக்காக இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாட வனிந்து ஹசரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்காவுக்கு தடை
வனிந்து ஹசரங்காவுக்கு தடை@icc

நடுவரை விமர்சித்த காரணத்துக்காக இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாட வனிந்து ஹசரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 ஆட்டம் பிப்.21 அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணிக்குக் கடைசி ஓவரில் 3 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4-வது பந்தை வீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் பேட்டரின் இடுப்பு பகுதிக்கு மேலே அப்பந்தை வீசினார். இதற்கு நடுவர் ஹனிபல் நோ பால் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு இலங்கை அணியின் டி20 கேப்டனான வனிந்து ஹசரங்கா, “அந்தப் பந்து இடுப்பு உயரத்தில் சென்றிருந்தால் கூட பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் உயரம் சென்றிருந்தால் பேட்டரின் தலையைத் தாக்கிருக்கும். இதைக் கூட பார்க்க முடியவில்லை என்றால் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர். அவர் வேறேதேனும் பணியை செய்யலாம்” என்றார்.

இதன் பிறகு நடுவரைத் தகாத வார்த்தைகளால் பேசிய காரணத்துக்காக இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாட வனிந்து ஹசரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹசரங்காவுக்கு மூன்று அபராதப் புள்ளிகளையும், ஆட்டத்தின் கட்டணத்திலிருந்து 50 சதவீத பணத்தை அபராதமாகவும் விதித்துள்ளது ஐசிசி.

கடந்த 24 மாதங்களில் 5 அபராதப் புள்ளிகளைப் பெற்ற காரணத்தால் இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாட வனிந்து ஹசரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் மாதம் தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் ஹசரங்கா பங்கேற்கமாட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in