மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் காலமானார்

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்...
ஃபாலி நாரிமன் காலமானார்
ஃபாலி நாரிமன் காலமானார்@mkstalin

பிரபல வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி நாரிமன் இன்று காலமானார். அவருக்கு வயது 95. நாரிமன் 1991-ல் பத்ம பூஷன் மற்றும் 2007-ல் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றார்.

1929-ல் பிறந்த நாரிமன் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு 1971-ல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆனார். 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான வழக்குகளிலும் அரசியல் தலைவர்களின் வழக்குகளிலும் ஃபாலி நாரிமன் வாதாடியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் திறமையாக வாதாடி, ஜெயலிதாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தார்.

ஃபாலி நாரிமனின் மறைவுக்கு மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in