ஜெயிஸ்வாலிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்: டக்கெட்டுக்கு நாசர் ஹுசைன் அறிவுரை

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டக்கெட்
டக்கெட்ANI

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த டெஸ்டின் 3-வது நாள் முடிந்தபின் இங்கிலாந்து வீரர் டக்கெட் ஜெயிஸ்வாலின் அதிரடி ஆட்டத்தை விமர்சித்தார்.

டக்கெட் ஜெயிஸ்வாலின் ஆட்டம் குறித்து கூறியதாவது: “எதிரணி வீரர்கள் இவ்வாறு விளையாடுவதைப் பார்க்கும்போது, ​​மற்றவர்களை விட வித்தியாசமாக விளையாடுகிறார்கள் என்பதால் நாங்கள் கொஞ்சம் பாராட்டப்பட வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

'பேஸ்பால்' ஆட்டத்தைக் கருத்தில் கொண்டு டக்கெட் இவ்வாறு பேசியதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாசர் ஹுசைன் கூறியதாவது:

“அவர் உங்களிடம் இருந்து அல்ல, அவர் வளர்ந்த விதத்திலிருந்து கற்றுக்கொண்டார். முடிந்தால் ஜெயிஸ்வாலிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். அந்த இளைஞரிடம் இருந்து நான் கற்றுக்கொள்வேன். சில சமயங்களில் 'பேஸ்பால்' குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியாது, இருந்தும் இந்த சூழ்நிலையிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டு முன்னேறலாம். இது குறித்து சுய பரிசோதனை செய்வார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in