ரஞ்சி கோப்பை: காலிறுதி ஆட்டங்களின் அட்டவணை வெளியானது

பிப். 23 முதல் ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பை@Tnca

2023-24 ரஞ்சி கோப்பையின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்நிலையில் காலிறுதி ஆட்டங்கள் பிப். 23 முதல் நடைபெறவுள்ளன.

கர்நாடகம், விதர்பா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, செளராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 7 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது தமிழக அணி. காலிறுதியில் செளராஷ்டிரம் அணியுடன் தமிழக அணி மோதுகிறது. தமிழ்நாடு vs செளராஷ்டிரம் ஆட்டம் கோயம்புத்தூரில் நடைபெறகிறது. அனுபவமிக்க வீர்ரகளுடன் இணைந்து இளம் வீரர்கள் அசத்தி வரும் நிலையில் தமிழக அணி இந்த ரஞ்சி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக தமிழக அணி 1987-88 ரஞ்சி கோப்பையில் வெற்றி பெற்றிருந்தது.

ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்களின் அட்டவணை:

கர்நாடகம் vs விதர்பா

மும்பை vs பரோடா

தமிழ்நாடு vs செளராஷ்டிரம்

மத்தியப் பிரதேசம் vs ஆந்திரப் பிரதேசம்

இந்தாண்டு ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆந்திரா அணியை சேர்ந்த ரிக்கி புய் 861 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தமிழக அணியின் ஜெகதீசன் 775 ரன்களுடன் இப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் புதுச்சேரி அணியின் கவுரவ் யாதவ் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in