நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு நாளை திருமணம்

ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு நாளை திருமணம்
ANI

நடிகை ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடியின் திருமணம் நாளை (பிப். 21) கோவாவில் நடைபெறுகிறது. பிரபல நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நாளை திருமணம் செய்யவுள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக ரகுல் ப்ரீத் சிங் 2021-ல் தனது பிறந்தநாள் அன்று அறிவித்தார்.

நாளை (பிப்.21) நடக்கவிருக்கும் திருமணத்தில் ஆடல், பாடல் எனப் பல கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளதாகவும் மேலும் ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதேபோல் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் திருமணப் பத்திரிகைகளை டிஜிட்டலில் மட்டும் அனுப்புவது, பட்டாசுகளைத் தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது போன்றவற்றில் திருமண வீட்டார் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், திருமண நிகழ்வுகளைப் புகைப்படம் எடுக்க ஊடகங்கள் உள்பட மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in