‘தில்லி சலோ’ பேரணியை நிறுத்தி வைத்துள்ள விவசாயிகள்

பிப். 21 வரை ‘தில்லி சலோ’ பேரணியை நிறுத்தி வைக்க உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
‘தில்லி சலோ’
‘தில்லி சலோ’ ANI

பிப். 21 வரை ‘தில்லி சலோ’ பேரணியை நிறுத்தி வைக்க உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யச் சட்டம் இயற்ற வேண்டும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகிய விவசாய சங்கங்கள் தில்லியை நோக்கி பிப். 13 முதல் பேரணியை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்கள் சம்மதம் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், “விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி விளைபொருட்கள் அரசாங்க நிறுவனங்களால் குறைந்தபட்ச விலைக்கு வாங்கப்படும். மேலும் கொள்முதல் செய்வதற்கான அளவுகோல் எதுவும் கிடையாது” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்நிலையில் பிப். 21 வரை ‘தில்லி சலோ’ பேரணியை நிறுத்தி வைக்க உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் இந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in