ஐபிஎல் 2024: கேகேஆர் அணியில் கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீரா தேர்வு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா அவரின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
துஷ்மந்தா சமீரா
துஷ்மந்தா சமீரா@dushmantha05

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா அவரின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் ரூ. 1 கோடிக்கு கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காத அட்கின்சன் தனது முதல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விலகி உள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அட்கின்சனின் பணிச்சுமையைக் குறைக்க, அவரை ஐபிஎல் போட்டியிலிருந்து விலகும்படி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இவருக்குப் பதிலாக கேகேஆர் அணியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா அவரின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல்-ல் துஷ்மந்தா சமீரா ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளில் விளையாடி உள்ளார். 12 ஆட்டங்களில் பங்கேற்ற இவர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in