தென்னாப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ‘மைக் பிராக்டர்’ மறைவு

முதல்தர கிரிக்கெட்டில் 401 ஆட்டங்களில் பங்கேற்று 48 சதம் மற்றும் 109 அரைசதம் உட்பட 21936 ரன்கள் குவித்து, 1417 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் பிராக்டர்.
மைக் பிராக்டர்
மைக் பிராக்டர்@icc

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மைக் பிராக்டர் (77) இருதய அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.

மைக் பிராக்டர், தென்னாப்பிரிக்கா அணிக்காக 7 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். தனது அனைத்து ஆட்டங்களையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய பிராக்டர் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மைக் பிராக்டர் பங்கேற்ற 7 டெஸ்டுகளில் தென்னாப்பிரிக்கா அணி ஒன்றில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் 401 ஆட்டங்களில் பங்கேற்று 48 சதம் மற்றும் 109 அரைசதம் உட்பட 21936 ரன்கள் குவித்து, 1417 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

1991 முதல் பயிற்சியாளராக பணியாற்றிய பிராக்டர் தென்னாப்பிரிக்க அணி 1992-ல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக பிராக்டர் இருந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த 1992 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து 2002 முதல் 2008 வரை ஐசிசி நடுவராகவும் பிராக்டர் பணியாற்றினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in