ராஜ்கோட் டெஸ்ட்: உலக சாதனையைச் சமன் செய்த ஜெயிஸ்வால்

டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வாசிம் அக்ரமின் சாதனையைச் சமன் செய்தார் ஜெயிஸ்வால்.
ஜெயிஸ்வால்
ஜெயிஸ்வால்ANI

டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வாசிம் அக்ரமின் சாதனையைச் சமன் செய்தார் ஜெயிஸ்வால்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெயிஸ்வால் 214 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டெஸ்டில், இளம் வயதில் 2 இரட்டைச் சதங்கள் அடித்த 3-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார் ஜெயிஸ்வால். மேலும் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (12) அடித்த வாசிம் அக்ரமின் சாதனையையும் சமன் செய்தார் ஜெயிஸ்வால்.

டெஸ்டில், இளம் வயதில் 2 இரட்டைச் சதங்கள்

21 வருடங்கள் 54 நாள்கள் - காம்ப்ளி

21 வருடங்கள் 318 நாள்கள் - பிராட்மேன்

22 வருடங்கள் 49 நாள்கள் - ஜெயிஸ்வால்

மேலும், ஜெயிஸ்வால் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் மற்றும் ஒரே டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 2-வது இரட்டைச் சதத்தை அடித்த 3-வது இந்திய வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in