மூன்றாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி.
மூன்றாவது டெஸ்ட்
மூன்றாவது டெஸ்ட்ANI

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஷுப்மன் கில் 65 ரன்களும், குல்தீப் யாதவ் 3 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் 2 சிக்ஸர்கள், 9 பவுன்ண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதன் பிறகு ரிடையர்ட் ஹர்ட் ஆன ஜெயிஸ்வால் மீண்டும் களத்திற்கு திரும்பினார். அவருடன் பக்கபலமாக சர்ஃபராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். சர்ஃபராஸ் கான் தனது 2-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். மறுபக்கம் ஜெயிஸ்வால் இரட்டைச் சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெயிஸ்வால் 214 ரன்களும், சர்ஃபராஸ் கான் 68 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in