‘அமரன்’ டீசர்: மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி உருக்கம்

10 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது அவரது நினைவையும் தேசபக்தியையும் வெள்ளித்திரையில் பார்ப்பதற்கான நேரம் இது.
‘அமரன்’
‘அமரன்’@Rajkumar_KP

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் படம் ‘அமரன்’. இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா “இப்படத்தைத் திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

‘அமரன்’ படம் குறித்து இந்து ரெபேக்கா கூறியதாவது:

“இதை எப்படிச் சொல்வது என ஆயிரம் முறை யோசித்தேன், ஆனால் எப்போதும் போல என் இதயத்தைப் பேச அனுமதிக்கிறேன்.

10 வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது அவரது நினைவையும் தேசபக்தியையும் வெள்ளித்திரையில் நிலைநிறுத்துவதற்கான நேரம் இது. நான் படத்தைக் காண ஆவலுடன் இருக்கிறேன் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த ஆர்வம் - அழிக்க முடியாத சோகம், அளவற்ற அன்பு, தவறாத நம்பிக்கையுடன் எப்போதும் கலந்துள்ளது.

ஒரு தகுதியான காரணத்திற்காக மிகவும் விலை உயர்ந்த ஒன்றை இழப்பது என்னவென்று அறிந்த எங்கள் குடும்பங்கள் நம்பிக்கையுடனும் துயரத்துடனும் நிற்கிறோம்" என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "என்னையும் எங்கள் குழுவையும் நம்பி இந்தப் பெரிய பொறுப்பைக் கொடுத்த இந்து ரெபேக்கா மேம் அவர்களுக்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் சார் மற்றும் அவரது குடும்பத்தினரின் தன்னலமற்ற சேவைக்காக என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in