ஹாரிஸ் ராஃப் ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

ஜூன் 30, 2024 வரை டி20 லீக் போட்டிகளில் ஹாரிஸ் ராஃப் விளையாட அனுமதி வழங்கப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஹாரிஸ் ராஃப்
ஹாரிஸ் ராஃப்ANI

கடந்த டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹாரிஸ் ராஃப் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக அவர் இத்தொடரில் பங்கேற்கவில்லை என்றும், காயம் குறித்த மருத்துவ அறிக்கை எதையும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்காததால் ஹாரிஸ் ராஃப் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 30, 2024 வரை டி20 லீக் போட்டிகளில் ஹாரிஸ் ராஃப் விளையாட அனுமதி வழங்கப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. மேலும் இத்தொடர் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் போட்டிகளும் நடந்தது. பாகிஸ்தான் அணிக்கு விளையாட மறுத்த ஹாரிஸ் ராஃப் பிக் பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்றார். இதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார் ஹாரிஸ் ராஃப்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in