அஸ்வின்
அஸ்வின்ANI

டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்

டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார் அஸ்வின்.

டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார் அஸ்வின்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்டில் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்டில் தனது 500-வது விக்கெட்டை எடுத்தார் அஸ்வின். இதன் மூலம் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் உலகளவில் இந்த சாதனையைப் படைத்த 9-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார் அஸ்வின். இந்திய அணி தரப்பில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் அதிக விக்கெட் விழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அஸ்வின் தனது 98-வது டெஸ்டில் இந்த சாதனையைப் படைத்தார். மேலும் அஸ்வின் குறைந்த டெஸ்டுகளில் இந்த சாதனையைச் செய்த 2-வது வீரர் ஆவார். இலங்கை அணியின் ஜாம்பவானான முரளிதரன் 87 டெஸ்டுகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in