விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின் ANI

புற்றுநோய்க்கான தடுப்பூசி: இறுதிக் கட்டத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள்

புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ உலகம் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது, “ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய வரலாற்றைப் படைக்க உள்ளனர். புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான மருந்து மற்றும் தடுப்பூசியைக் கண்டறியும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. இந்த பணிகள் முடிவடைந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த பயன் அடைவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in