புறநகர் ரயில்
புறநகர் ரயில் ANI

பராமரிப்புப் பணி: 5 புறநகர் ரயில் சேவைகள் இரண்டு நாள்களுக்கு ரத்து

பராமரிப்புப் பணிகளுக்காக 5 புறநகர் ரயில்கள் இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

பராமரிப்புப் பணிகளுக்காக 5 புறநகர் ரயில்கள் இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவைக்கு உதவும் வகையில் புறநகர் ரயில்கள் செயல்பட்டு வருகிறது. மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆவடியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையேயான மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 புறநகர் ரயில்கள் இரண்டு நாள்களுக்கு முழுவதாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் சேவை மாற்றங்களின் விவரம்:

* இரவு 11.55 மணிக்கு சென்னை கடற்கரை - பட்டாபிராம் ரயில் -> இன்றும் (பிப். 15), நாளையும் (பிப். 16) ரத்து.

* இரவு 11.55 மணிக்கு ஆவடி - பட்டாபிராம் ரயில் -> இன்றும் (பிப். 15), நாளையும் (பிப். 16) ரத்து.

* அதிகாலை 3.50 மணிக்கு பட்டாபிராம் - மூர் மார்க்கெட் ரயில் -> (பிப். 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாள்களுக்கு ரத்து)

* அதிகாலை 3.50 மணிக்கு ஆவடி - மூர் மார்க்கெட் ரயில் -> (பிப். 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாள்களுக்கு ரத்து)

* அதிகாலை 4 மணிக்கு ஆவடி - மூர் மார்க்கெட் ரயில் -> (பிப். 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாள்களுக்கு ரத்து)

மேலும் இரவு 8.25 மணிக்கு பட்டாபிராமில் புறப்படும் ரயில் ஆவடியில் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in