தேர்தல் பத்திரம் ரத்து: முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்ANI

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது, அது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் ரத்து குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது X தளத்தில் கூறியதாவது: “தேர்தல் பத்திரம் அரசியல் அமைப்புக்கு முரணானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே. இது வெளிப்படையான தேர்தல் முறையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளின் ஜனநாயகத்தையும் சம நிலையையும் மீட்டுள்ளது. மேலும் சாமானியர்களின் நம்பிக்கையையும் இது உறுதி செய்துள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in