பாக்யராஜ் வெளியிட்ட காணொளி: காவல்துறை கண்காணிப்பாளர் மறுப்பு

பாக்யராஜ் கூறிய தகவல் வதந்தியே, இது போன்ற வதந்தி பரப்புவது குற்றச் செயலாகும்.
பாக்யராஜ்
பாக்யராஜ் @UngalKBhagyaraj
1 min read

தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் சமீபத்தில் தன்னுடைய X தளத்தில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அந்த காணொளியில் பாக்யராஜ் கூறிய தகவல் வதந்தியே, இது போன்ற வதந்தி பரப்புவது குற்றச் செயலாகும் எனக் கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் ஆற்றில் இறங்கிக் குளிப்பவர்களின் கால்களை இழுத்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்வதாகவும், அதன்பிறகு அவர்களின் உடல்களை மீட்டுக் கொடுத்து பணம் பெறுவதாகவும் பாக்யராஜ் அந்த காணொளியில் பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாக்யராஜ் வெளியிட்ட காணொளிக்குக் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மறுப்பு தெரிவித்தார்.

இது குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியதாவது: “பாக்யராஜ் பேசியது ஆதாரமற்றது. அது போன்ற சம்பவம் நடந்ததாக ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. மேலும் அவர் கூறிய பத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஆற்றில் 2022, 2023-ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை. எனவே பாக்யராஜ் கூறிய தகவல் வதந்தியே, இது போன்ற வதந்தி பரப்புவது குற்றச் செயலாகும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in